பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள்; 950 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எப்.சி ஆகியவைதான் அதிக புள்ளிகளைப் பெற்றன.

பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள்; 950 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

வரும் வியாழக் கிழமை தேர்தல் முடிவுகள் வரும் வரை, பங்குச் சந்தையில் இப்படி ஏற்றம் இருக்கும் என்று சில வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

ஹைலைட்ஸ்

  • சென்செக்ஸ் 38,892.89 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது
  • ஆசிய பங்குச் சந்தைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் முதலீடுகள் தொடர்கின்றன
  • பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்

2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, வாக்குப்பதிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள், பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளால், பி.எஸ்.இ சென்செக்ஸ், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ், 962.12 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38,892.89 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. நிஃப்டியைப் பொறுத்தவரையில், 286.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,694 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. வங்கித் துறை, நிதி சேவைத் துறை, வாகனத் துறை மற்றும் உலோகத் துறைகளின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன. 

இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் 10 விஷயங்கள்:

1.காலை 9:33 மணிக்கு சென்செக்ஸ் 672.25 புள்ளிகள் அல்லது 1.77 சதவிகிதம் அதிகரித்தது. நிஃப்டி, 203.05 புள்ளிகள் அல்லது 1.78 சதவிகிதம் அதிகரித்தது. 

2.லார்சன் & டூப்ரோ, எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, மாருதி சுசூகி இந்தியா மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.49 முதல் 4.60 சதவிகதம் வரை உயர்ந்துள்ளன.

3.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எப்.சி ஆகியவைதான் அதிக புள்ளிகளைப் பெற்றன.

4.வரும் வியாழக் கிழமை தேர்தல் முடிவுகள் வரும் வரை, பங்குச் சந்தையில் இப்படி ஏற்றம் இருக்கும் என்று சில வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

5.ஐடிபி கேப்பிடலைச் சேர்ந்த ஏ.கே.பிரபாகர், “தேர்தல் முடிவுகள் வரும் வரை, முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு என்பது அவர்களின் நிலைப்பாட்டை காண்பிக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

6.தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

7.பிரபாகர் மேலும், “நிலையான அரசுதான், சந்தைக்கு நல்லது” என்றும் கூறியுள்ளார். 

8.அமெரிக்கா மற்றும் சீனா இடையில் தொடர்ந்து வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் முதலீடுகள் தொடர்ந்து வருகிறது. 

9.அமெரிக்காவின் எஸ்&பி 500 இ-மினி பங்குகள் 0.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வெள்ளிக் கிழமை அமெரிக்காவில் பங்குகள் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

10.கடந்த வாரம் நிஃப்டி, 128.25 புள்ளிகள் அல்லது 1.14 சதவிகிதம் வளர்ந்தது. பி.எஸ்.இ சென்செக்ஸ், 467.78 புள்ளிகள் அல்லது 1.25 சதவிகிதம் வளர்ந்தது. 

More News