கணிக்க முடியாத நிலையில் ஏற்ற இறக்கங்களுடன் தொடரும் சென்செக்ஸ், நிஃப்டி!

வாரத்தின் முதல் நாளான நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தைகள் முறையே, 0.63 சதவிகிதம் மற்றும் 0.68 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

கணிக்க முடியாத நிலையில் ஏற்ற இறக்கங்களுடன் தொடரும் சென்செக்ஸ், நிஃப்டி!

இதில் எச்.டி.எப்.சி, எச்.டி.எப்.சி வங்கி மற்றும் எல் அண்டு டி ஆகியவையின் பங்குகள் அதிகம் சரிவடைந்தன.

தேசிய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தையான நிஃப்டி, ஆகியவை இன்று காலையில் தொடங்கியவுடன் அதிகரித்தது. ஆனால், அடுத்த ஒரு சில நிமிடங்களில் சரிவை நோக்கி நகர்ந்தன. சென்செக்ஸைப் பொறுத்தவரை, 155.3 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிஃப்டி, 33.8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 11,958.55 என்ற ரீதியில் நிலை கொண்டது. சில நிமிடங்களில் 57 புள்ளிகள் சரிந்தது நிஃப்டி. நிதித் துறை, கட்டுமானத் துறை, ஐடி துறை மற்றும் உலோகத் துறைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்த ஸ்திரமற்றத் தன்மை நிலவுகிறது. 

இன்று காலை 9:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ், 64.07 புள்ளிகள் சரிவடைந்து 39,619.22 என்ற ரீதியில் நிலை கொண்டது. நிஃப்டி, 14.10 புள்ளிகள் சரிவடைந்து 11,91065 என்ற ரீதியில் நிலை கொண்டது. 

இதில் பாரதி இன்ஃப்ராடெல், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி, எல் அண்டு டி, எஸ்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் பங்குகள் 1.24 சதவிகிதம் முதல் 2.61 சதவிகம் வரை சரிந்து காணப்படுகின்றன.

More News