சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்

Stock market LIVE updates: சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன.

சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்

பார்தி ஏர்டெல் பங்குகள் 1.41 சதவீதம் சரிவுக்குப் பின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமின்றி உள்ளது.

இந்திய பங்குச் சந்தை பலவீனமான குறிப்புகளுடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  278.45 புள்ளிகள் சரிந்து 37,202.67 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 49.55 புள்ளிகள் சரிந்து 11,035.85 புள்ளிகளில் உள்ளது. நிதியியல், மெட்டல் மற்றும் பார்மாஷூட்டிகல் பங்குகள் சந்தையை சரிவை நோக்கி தள்ளின. 

காலை 10:21 மணியளவில் சென்செக்ஸ் 259.98 புள்ளிகள் சரிந்து 37,221.14 புள்ளிகளில் இருந்தது. நிஃப்டி 45.70 புள்ளிகள் சரிந்து 11,039.70 புள்ளிகளில் உள்ளது. 

நிஃப்டியில் ஹிண்டல்கோ, வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மெண்ட், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டி'ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டன. இதன் வர்த்தகம் 2.21 சதவீதம் முதல் 2.96 சதவீதம் சரிந்தன. 

சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி  பேங்க், மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன.

 மும்பை பங்குச் சந்தையில் 751 நிறுவனப் பங்குகள் ஆதாயத்தை அடைந்தன. 966 நிறுவனப் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 650 நிறுவனப் பங்குகள் முன்னணியில் உள்ளன. 932 பங்குகள் சரிவை எதிர்கொண்டன. 

பார்தி ஏர்டெல் பங்குகள் 1.41 சதவீதம் சரிவுக்குப் பின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமின்றி உள்ளது. 

ஹெச்டிஎஃப்சி, ஐடிசி மற்றும் எஸ்பிஐ, ஆகியவற்றின் நிதியியல் முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்படும். ஜப்பானுக்கு வெளியே ஆசிய-பசிபிக் சந்தை 0.4 சதவீதம் சரிந்தன. ஜப்பானின் நிக்கேய்0.4 சதவீதம் சரிந்தது. தென் கொரியாவின் கொஸ்பி 0.5 சதவீதம் சரிந்தன. ஆஸ்திரேலிய பங்குகள் 0.3 சதவீதம் சரிவை எதிர்கொண்டன.