SBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி

SBI interest rates: எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கிற்கு ரூ. 1லட்சம் வரை வட்டி வீதம் 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2019 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

SBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி

SBI interest rates:புதிய எஃப்.டிக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 10, 2019 முதல் அமலுக்கு வரும்.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது சேமிப்பு மற்றும் வைப்பு கணக்கிற்கான வட்டி வீதத்தைக் குறைப்பதாக புதன்கிழமை அறிவித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கால வைப்பு அல்லது நிலையான வைப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைப்பதாகவும் அறிவித்தது. எஸ்பிஐ வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் 135 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதங்கள் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதிக்கு வழங்கும் முக்கிய வட்டி விகிதம் ஆகும். 

எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கிற்கு ரூ. 1லட்சம் வரை வட்டி வீதம் 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2019 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. 

சில்லறை கால வைப்பு மற்றும் மொத்த கால வைப்புத்தொகைகளுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை எஸ்பிஐ முறையே 10 மற்றும் 30 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.  புதிய எஃப்.டிக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 10, 2019 முதல் அமலுக்கு வரும்.

மாற்றப்பட்ட வட்டி விகிதம்:

Maturity periodInterest rate
For general publicFor senior citizens
Existing (with effect from 10.09.2019)Revised (with effect from 10.10.2019)ExistingRevised
46 days to 179 days5.5%5.5%6%6%
180 days to 210 days5.8%5.8%6.3%6.3%
211 days to less than 1 year5.8%5.8%6.3%6.3%
1 year to less than 2 year6.5%6.4%7%6.9%
2 years to less than 3 years6.25%6.25%6.75%6.75%
3 years to less than 5 years6.25%6.25%6.75%6.75%
5 years and up to 10 years6.25%6.25%6.75%6.75%

(Source: sbi.co.in)

Newsbeep

வட்டி விகிதங்களில் திருத்தம் "போதுமான பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு" குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.