எஸ்பிஐ வங்கியில் குறைந்த பட்ச இருப்புத் தொகை. தண்டனை கட்டணத்திற்கான விதிமுறை என்ன தெரியுமா...?

குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது வாடிக்கையாளர்க்கு வாடிக்கையாளர் மாறக்கூடியது. வங்கியிருக்கும் இடம், எந்தளவு குறைந்துள்ளது என்பதை பொறுத்து தண்டனைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியில் குறைந்த பட்ச இருப்புத் தொகை. தண்டனை கட்டணத்திற்கான விதிமுறை என்ன தெரியுமா...?

SBI minimum balance rules: ரூ.1,000 -3,000 வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  வங்கி கூடுதல் தண்டனைக் கட்டணத்தைக் குறைக்க, தன்னுடைய வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ மாதம் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த குறைந்தபட்ச தொகை என்பது சேமிப்புக் கணக்கிற்கு மட்டுமே. 

குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது வாடிக்கையாளர்க்கு வாடிக்கையாளர் மாறக்கூடியது.  வங்கியிருக்கும் இடம், எந்தளவு குறைந்துள்ளது என்பதை பொறுத்து தண்டனைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 

மெட்ரோ, நகர்ப்புறம், பாதி நகர்ப்புறம், மற்றும் கிராமம் ஆகிய இடங்களில் வைத்திருக்க வேண்டிய  குறைந்தபட்ச இருப்புத் தொகை

CategoryAverage monthly balance requirement
MetroRs 3,000
UrbanRs 3,000
Semi UrbanRs 2,000
RuralRs 1,000
(Source: sbi.co.in)

குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்ட்டால் தண்டனை கட்டணம் ரூ. 5 முதல் 15 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரங்கள் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் ( sbi.co.in.) குறிப்பிடப்பட்டுள்ளது. 

மெட் ரோ மற்று நகர்ப்புறங்களில் விதிக்கப்படும் தண்டனைக் கட்டணம்

ShortfallPenalty for non-maintenance of AMB in urban/metro SBI branches
<=50%Rs. 10 + GST
>50%-75%Rs. 12 + GST
>75%Rs. 15 + GST
(Source: sbi.co.in)

எஸ்பிஐ வங்கி கிளை இருக்கும் இடத்தை நான்கு வகையாக பிரித்துள்ளது. அவை மெட்ரோ, நகர்ப்புறம், பாதி நகர்ப்புறம், மற்றும் கிராமம் என நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 -3,000 வரை குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும். 

பாதி நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் விதிக்கப்படும் தண்டனைக் கட்டணம்

ShortfallPenalty for non-maintenance of AMB in semi-urban SBI branches
<=50%Rs. 7.50 + GST
>50%-75%Rs. 10.00 + GST
>75%Rs. 12.00 + GST
(Source: sbi.co.in)

கிராமங்களில் விதிக்கப்படும் தண்டனைக் கட்டணம்

ShortfallPenalty for non-maintenance of AMB in rural SBI branches
<=50%Rs. 5.00 + GST
>50%-75%Rs. 7.50 + GST
>75%Rs. 10.00 + GST
(Source: sbi.co.in)

வாடிக்கையாளர்கள் கட்டாயமாக குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். எஸ்பிஐயில் ஜன் தன் கணக்குகள், அடிப்படையான சேமிப்புக் கணக்குகள், சம்பள தொகுப்பு கணக்குகள், மற்றும் சிறு வங்கிக் கணக்குகள் ஆகியவற்றில் குறைந்த பட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சேமிப்புக் கணக்குகளை ஜீரோ பேலன்ஸில் கூட வைத்திருக்க முடியும்.

More News