Profit

வீட்டுக் கடன்கள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் எஸ்பிஐ

SBI interest rate: எம்.சி.எல்.ஆரில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக குறைத்ததை தொடர்ந்து, இந்த நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வீட்டுக் கடன்கள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் எஸ்பிஐ

சில்லறை கால வைப்புக்கான வட்டி விகிதங்களை வங்கி 20-25 பிபிஎஸ் குறைத்தது.


கடன்களுக்கான வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதேபோல், டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வட்டிவிகித அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது. 

அதன்படி, கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.15% குறைத்து அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதனால், நாளை (செப்.10) முதல் எஸ்பிஐ வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.15% குறைகிறது.  

ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் போது சேர்த்துச் செலுத்த வேண்டிய வட்டியாகும். ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும்.

அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் வகையில் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை உள்ளது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவது இல்லை. 

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி மார்ஜினல் காஸ்ட் என்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வீடு, வாகனக்கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top