Profit

கேரள வெள்ளத்தில் சேதமான வீடுகளை சீர் செய்ய, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்

நவம்பர் 30, 2018-க்குள் விண்ணப்பிப்போருக்கு மட்டுமே இந்த சிறப்பு கடன் வழங்கப்படும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கேரள வெள்ளத்தில் சேதமான வீடுகளை சீர் செய்ய, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்

வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த கேரள மக்களுக்கு குறைந்த வட்டி விகதங்களுடன் சிறப்பு வீட்டுக் கடன் வழங்குவதாக எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி ஹோம் ஃபினான்ஸ் மற்றும் முத்தூட் ஹோம் வங்கிகள் தெரிவித்துள்ளன.

எஸ்.பி.ஐ வங்கி சிறப்பு கடனாக 10 லட்சம் ரூபாய் வரை, 8.45% வட்டிக்கு, சேதமடைந்த வீடுகளை சரி செய்ய அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது. நவம்பர் 30, 2018-க்குள் விண்ணப்பிப்போருக்கு மட்டுமே இந்த சிறப்பு கடன் வழங்கப்படும்.

எல்.ஐ.சி ஹோம் ஃபினான்ஸ், கேரள வெள்ளம் என்ற திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 8.5% வட்டியுடன் வழங்குகிறது. இந்த கடன், வெள்ளம் பாதிக்கபப்ட்ட பகுதிகளில், சேதமடைந்த வீட்டை சரி செய்யவும், மேம்படுத்தவும், மறு கட்டமைப்பு செய்யவும் வழங்கப்படும் என்று எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் இந்த கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தங்களிடம் ஏற்கனவே கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இ.எம்.ஐ செலுத்த தாமதமானால், அதற்காக எந்த அபராதமும் விதிக்கப்படாது எனவும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

முத்தூட் ஹோம் ஃபின் நிறுவனம், எளிய கடன் வழங்கும நடைமுறைகளுடன், நீண்ட காலத்துக்கான கடன் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 10 லட்சம் ரூபாய் வரை வீட்டை மறு சீரமைப்பு செய்யவும், சேதமடைந்த வீட்டை சரி செய்யவும் கடன் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

2018 டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த கடன் பெற விண்ணப்பிக்கலாம். கடனை திருப்பி செலுத்தும் காலம், 20 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top