வட்டி விகிதத்தை அதிகரித்தது எஸ்.பி.ஐ - கடன்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்

வீடு, வாகனம் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க இருக்கிறது.

வட்டி விகிதத்தை அதிகரித்தது எஸ்.பி.ஐ - கடன்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, குறைந்தபட்ச வட்டி விகிதத்தை ( MCLR) 0.2% அதிகரித்துள்ளது. இதனால் வீடு, வாகனம் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க இருக்கிறது. புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அன்னைத்து கடன்களுக்குமான வட்டியில் 20 பேசிஸ் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. இப்போது MCLR 8.1% ஆக உள்ளது. முன்னர் இது 7.9% ஆக இருந்தது. 

TenorExisting MCLR (In %)Revised MCLR (In %)
Over night7.98.1
One Month7.98.1
Three Month7.958.15
Six Month8.18.3
One Year8.258.45
Two Years8.358.55
Three Years8.458.65

ஓராண்டு கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் (MCLR) 8.45% ஆக உயர்ந்துள்ளது. முன் இது 8.25% ஆக இருந்தது. 3 ஆண்டுகள் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் (MCLR) 8.45% ஆக  இருந்து 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகதத்தை 25 புள்ளிகள் அதிகரித்து 6.5% ஆக அதிகரித்ததை அடுத்து எஸ்.பி.ஐ இந்த வட்டி உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

Newsbeep

இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஜனவரி 2014-ம் ஆண்டுக்கு பின் கடந்த ஜூன் மாதம் 0.25% உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.