This Article is From Jul 17, 2018

வயதான காலத்தில் உங்களின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் தங்களின் தற்போதைய வாழ்க்கையைத் தான் கருத்தில் கொள்கிறார்களே தவிர, எதிர்க்காலத்தைப் பற்றி எண்ணம் இல்லாமல் இருக்கிறார்கள்

வயதான காலத்தில் உங்களின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் தங்களின் தற்போதைய வாழ்க்கையைத் தான் கருத்தில் கொள்கிறார்களே தவிர, எதிர்க்காலத்தைப் பற்றி எண்ணம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், வேலையில் இருக்கும் போதே எதிர்காலத்திற்கும் சேர்த்து சேமிப்பதே நன்மை பயக்கும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது இறுதி காலத்திற்கு மட்டுமில்லாது, எதிர்பாரத நேரத்தில் வரக்கூடிய செலவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டுமென்றால் எவ்வுளவு சீக்கிரம் சேமிப்பை தொடங்கிறமோ அத்தனை எளிதில் அது பயனைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆவ்னிவ் வெல்த் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அமித் கச்ரூ தெரிவிக்கையில், தொலை நோக்கு பொருளாதார திட்டங்கள் வகுப்பது தனி நபருக்கு பெரிதும் பயன் தரும். தனது வருவாயில் இருந்து குறிப்பிட்ட அளவை எடுத்து சேமிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய நன்மை தரும் என்று தெரிவித்துள்ளார்.

வெல்த் டிஸ்கவரி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல் அகர்வால் தெரிவிக்கையில், நாம் அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற வேண்டும் என்கிற உண்மையை உணர வேண்டும். இன்று வருவாய் இருக்கும் போது ஓய்வுகால பட்ஜெட், ஹெல்த் கேர் இன்ஸூரன்ஸ், ஆபத்துகால நிதி, உயர்படிப்புக்கு சரியான முறையில் சேமிக்க வேண்டும்.

சேமிப்பு என்பது நீண்டகால தேவைக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும். இதனால் ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டும் சேமிக்காமல் பல்வேறு விதங்களில் சேமிப்பை ஏற்படுத்துவது பயன் தரும். ஈக்விட்டி, மியூட்சுவல் பண்ட்ஸ், பொது வைப்பு நிதி, மாத ஓய்வூதிய திட்டங்கள், குறுகிய கால இன்ஸூரன்ஸ், ரியல் எஸ்டேட், தங்கம் வாங்குதல் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்ல பலன் தரும்.