This Article is From Jun 11, 2020

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 709 புள்ளிகள் குறைந்தது

கடந்த பிப்ரவரிக்கு பின்னர் உலகம் முழுவதும் 2 கோடிப்பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீண்டும் வேலையை பெறுவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 709 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி ஜெர்மனியின் DAX, இங்கிலாந்தின் FTSE 100 மற்றும் பிரான்சின் CAC 40 குறியீடுகள் தலா 2 சதவீதம் சரிந்தன.

வியாழக்கிழமையான இன்று பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 709 புள்ளிகள் அல்லது 2 சதவீதம் குறைந்து 33,538.37 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 இன்டெக்ஸ் 2.12 சதவீதம் அல்லது 214 புள்ளிகள் சரிந்து 9,902 ஆக முடிவடைந்தது.

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் நடப்பாண்டில் வளர்ச்சி 6.5 சதவீதமாகவும், வேலையின்மை 9.3 சதவீதமாகவும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் பங்குச் சந்தையையும் பாதித்துள்ளன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி ஜெர்மனியின் DAX, இங்கிலாந்தின் FTSE 100 மற்றும் பிரான்சின் CAC 40 குறியீடுகள் தலா 2 சதவீதம் சரிந்தன.

சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் பணிநிறுத்தங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள் பொருளாதாரத்தை உலகளவில் கடுமையாக பாதித்துள்ளது.

அதேநேரம், பாதிப்பு குறைந்த நாடுகளிலும், பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் எழுச்சி அடையும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.