Nielsen - கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமப்புற நுகர்வு குறைந்துள்ளது

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் மந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற பிரிவில் அதிக சார்புடையதாகவும் வேலையின்மை விகிதங்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

Nielsen - கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமப்புற நுகர்வு குறைந்துள்ளது

2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி மீட்கப்படும் என்று நீல்சன் அறிக்கை தெரிவிக்கிறது.

கிராமப்புற இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. 
வருமான வீழ்ச்சி மற்றும் பரந்த கடன் நெருக்கடி உள்நாட்டு செலவீனங்களை குறைத்துள்ளது. 

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் கிராமங்களில் தேயிலை முதல் பற்பசை வரை பொருட்களின் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது
இது கடந்த ஆண்டு 20 சதவீதத்திலிருந்து சரிந்துள்ளது என்று நீல்சன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் விரிவாக்கம் நகர்ப்புறங்களிலிருந்து வெகுவாக கீழே இறங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இதே காலாண்டில் இருந்ததை விட பாதிக்கும் குறைந்துள்ளது. 

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் பலவீனமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் செலவீனங்கள் குறைப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. கார் தயாரிப்பாளர்கள் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். இந்த வாரம் நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை என்று கூறியுள்ளது.

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் மந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற பிரிவில் அதிக சார்புடையதாகவும் வேலையின்மை விகிதங்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி மீட்கப்படும் என்று நீல்சன் அறிக்கை தெரிவிக்கிறது. “வீழ்ச்சியின் ஆரம்பகட்ட அறிகுறிகளை நாங்கள் இப்போது காண்கிறோம்.அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நுகர்வோர் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சி 8.5 சதவீதமாக உயரும்” என்று கணித்துள்ளது.

More News