டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது!!

ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோன அச்சுறுத்தல் காரணமாக பங்குகள் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதாக முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது!!

இந்திய ரூபாயின் மதிப்பு இனி வரும் சில நாட்களுக்கு வீழ்ச்சியை சந்திக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

வியாழக்கிழமையான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 75-யை தாண்டி, ரூ. 75.30 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய நிதிச் சந்தைகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. அத்துடன் ஆசிய நாணயங்களின் பலவீனம் மற்றும் வெளிநாடுகளில் டாலரின் நிலை வலிமையாக இருப்பது ஆகியவற்றால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 74.96 - ஆக இருந்தது. இது படிப்படியாக சரிந்து ரூ. 75.30-வில் முடிந்தது. 

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2.01 சதவிதமும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 2.42 சதவீதமும் குறைந்தன. தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய சந்தைகள் சரிவை சந்திக்கின்றன.

கொரோனா வைரஸ் சர்வதேச வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இனி வரும் சில நாட்களுக்கு வீழ்ச்சியை சந்திக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். 

ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோன அச்சுறுத்தல் காரணமாக பங்குகள் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதாக முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

உலகளவில் 2,19,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.