Profit

இன்று 7-12-18 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 காசுகள் அதிகரித்தன

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ச்சியாக இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஆதரவளித்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இன்று 7-12-18 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 காசுகள் அதிகரித்தன

INR Vs USD: On Thursday, rupee had closed at 70.90 per dollar.


MUMBAI: அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 காசுகள் அதிகரித்து 70.44 ஆக உள்ளது. ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தையினால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. 

அந்நிய  செலவாணி வர்த்தகர் கூறியதவாது: ஏற்றுமதியாளர்களினாலும் மற்றும் வங்கிகளினாலும்  அமெரிக்கா டாலரின் விற்பனை அதிகரித்துள்ளது.  வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ச்சியாக இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஆதரவளித்தது.

நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 44 காசுகள் குறைந்து டாலருக்கு ரூ.70.90 ஆக இருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை குறைவும் உள்நாட்டு வர்த்தகத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது. உலகளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் இண்டர்நேஷ்னல் பென்ஞ் மார்க் 0.53 சதவீதம் குறைந்து  59.74 டாலாராக உள்ளது.

நிகர அடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகள் ரூ. 72.47 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 389.78 கோடியாக மதிப்பு பங்குகளை விற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மும்பை பங்குசந்தை 157.23 புள்ளிகள் அதிகரித்து 35, 469.36 ஆகவுள்ளது. நிஃப்டி 50.45 புள்ளிகள் உயர்ந்து 10,640.70 புள்ளிகள் உள்ளன.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



For the latest News & Live Updates on Election Results from each assembly constituency in Madhya Pradesh, Rajasthan, Mizoram, Chhattisgarh, Telangana, like us on Facebook or follow us on Twitter for updates.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top