Profit

வரலாற்றுச் சரிவை எட்டியது ரூபாய் மதிப்பு - முக்கிய தகவல்கள்

டாலரின் மதிப்பு உறுதியான நிலையில் இருப்பதால், இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வரலாற்றுச் சரிவை எட்டியது ரூபாய் மதிப்பு - முக்கிய தகவல்கள்

இந்திய ரூபாய் மதிப்பு 42 பைசா சரிந்து வரலாற்றில் இல்லாத உச்சமாக 70.52 ரூபாய்க்கு சரிந்து உள்ளது. டாலருக்கான தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாய்க்கான மதிப்பு குறைந்துள்ளது. இறக்குமதியாளர்கள், எண்ணெய்  சுத்தீகரிப்பாளர்களுக்கான டாலர் தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேல்லும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணம்.

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து தெரிந்து கொள்ள சில தகவல்கள்:

1. இன்று காலை ரூபாய் மதிப்பு 22 பைசா சரிந்து 70.32 பைசாவாக இருந்தது

2. செவ்வாய் அன்று நாள் முடிவில் ரூபாய் மதிப்பு 6 பைசா அதிகரித்து 70.10 ரூபாயாக இருந்தது.

3. சர்வதேச அளவில் பல கரன்சிகளுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. 

4. வர்த்தக பற்றாக்குறை உயர்ந்ததும் ரூபாய் மதிப்பு குறையக் காரணம். வர்த்தக பற்றாக்குறை 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 18 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

5. இன்று ஆசிய சந்தைகள் சற்று உயர்வுடனே இருந்தன. அமெரிக்கா மெக்சிக்கோ வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதால் உயர்வு ஏற்பட்டுள்ளது.

6. கச்சா எண்ணெய் விலையில் இன்று பெரிய மாற்றங்கள் இல்லை. ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தாலும், எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருப்பதால் விலை நிலையாக இருக்கிறது. 

 7. பங்குச் சந்தைகள் இன்று சென்செக்ஸ் 38,989.65 புள்ளிகளாகவும், நிஃப்டி 11,739.90 ஆகவும் தொடங்கின.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top