டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்வு

ரூபாய் vs டாலர் : சந்தையில் ரூபாயின் மதிப்பு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் சரிவை சரி செய்வதற்கான செயல்முறைகள் புதனன்று வெளியிடப்பட்டது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஃபோரெக்ஸ் சந்தைகள் வியாழனன்று மூடப்பட்டிருந்தன.

இன்றைய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து ரூ. 71.68- ஆக உள்ளது. பண மதிப்பின் வீழ்ச்சியை சரி செய்வதற்கு மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதி அளித்திருந்தது. இதனால் பணத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியை சந்திக்கவில்லை. ஃபோரெக்ஸ் டீலர்ஸ் அளித்த தகவலின்படி ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அளிக்கும் டாலரின் மதிப்பு மற்ற வெளிநாட்டு கரன்சிகளுடன் ஒப்பிடும்போது பலவீனமாக காணப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

டாலர் – ரூபாய் மதிப்பு குறித்து அறிய வேண்டிய தகவல்கள்

  1. பண மதிப்பை நிலைக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது.
  2. வாடிக்கையாளர்களின் பண மதிப்பிழப்பு 3.69-ஆக ஆகஸ்டில் குறைந்தது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை விட குறைவானதாகும்.
  3. சில்லறை பணவீக்கத்தை பொருத்த அளவில் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
  4. அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும் பத்திர சந்தைகளும் வெள்ளிக்கிழமையான இன்று ஏற்றத்துடன் தொடங்கின. 10 ஆண்டு பத்திரம் 8.11 சதவீதமாக இருந்தது. நேற்று இதன் மதிப்பு 8.13 சதவீதம்.
  5. சீனா – அமெரிக்க வர்த்தக போர் சற்று மென்போக்கை அடைந்ததால் ஆசிய பங்குச் சந்தைகளின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
  6. கடந்த ஒருமாதமாக வீழ்ச்சியில் இருந்த கச்சா எண்ணெய் மதிப்பு சற்று உயரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் சந்தையில் வர்த்தகப் போர் நிலவி வருவதால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நீடிக்கிறது.
  7. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஃபாரெக்ஸ் சந்தைகள் வியாழனன்று மூடப்பட்டது.
  8. புதன்கிழமையன்று முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்திருந்தது. 72.91 என்கிற வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து 51 காசுகள் அதிகரித்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 72.18- ஆக உள்ளது.
  9. இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ரூபாயின் மதிப்பு குறைந்து வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் மட்டும் 12 சதவீதமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
  10. வெள்ளியன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 326.74 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 44.70- ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 101.90 புள்ளிகளும் உயர்ந்து 11 ஆயிரத்து 471.80- ஆகவும் உள்ளது.
Newsbeep