Profit

மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிந்தது ரூபாய் மதிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலால், டாலர் மதிப்பு நேற்றும் அதிகரித்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிந்தது ரூபாய் மதிப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு புதிய வரலாற்று சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை 21 பைசாக்கள் சரிந்து 71.79 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 71.43 ரூபயாக இருந்தது. நேற்றைய நாள் முடிவில் ரூபாய் மதிப்பு 71.58 ரூபயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து தெரிந்து கொள்ள சில தகவல்கள்:

1. சர்வதேச அளவில் உள்ள கரென்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தக போர் உயரும் என்பதால், டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது.
2. செவ்வாய் அன்று நாள் முடிவில், ரூபாய் மதிப்பு 37 பைசாக்கள் அதிகரித்து 71.58 ரூபாய்க்கு முடிந்தது.
3. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலால், டாலர் மதிப்பு நேற்றும் அதிகரித்தது. 
4. ஆசிய கண்டத்திலேயே இந்திய ரூபாய் தான் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் ஆகியவை இதற்கு காரணம் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
5. கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது. 
6. அந்நிய வர்த்தக முதலீட்டாளர்கள் 32.64 கோடி ரூபாய்க்கான பங்குகளை வாங்கியுள்ளனர்.
7. இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 13.52 புள்ளிகள் குறைந்து 38,144.40 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 9.52 புள்ளிகள் சரிந்து 11,511.20 ஆக இருந்தது.



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top