Profit

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது

கடந்த ஒரு மாதமாக குறைந்து இருந்த இந்திய ரூபாய் மதிப்பு 32 பைசா அதிகரித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது
புதன் கிழமை அன்று எடுக்கப்பட்ட டேட்டாவின் படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.06 என இருந்தது. கடந்த ஒரு மாதமாக குறைந்து இருந்த இந்திய ரூபாய் மதிப்பு 32 பைசா அதிகரித்துள்ளது. ஏற்றுமதியாளர்களின் சந்தையினாலும், வங்கிகளின் செயல்கள் இந்திய ரூபாய் மதிப்பிற்கு ஆதரவாக இருந்தது என ஃபோரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
  1. ஆசிய சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களினால் வர்த்தகம் இன்று பாதிப்படைந்துள்ளது.
  2. ஆனால் ரூபாயின் மதிப்பு 39 பைசா சரிந்துள்ளது. கடந்த மே 23 ஆம் தேதியிலிருந்து, இன்று தான் ரூபாய் மதிப்பில் குறைந்த க்ளோசிங் வைத்துள்ளது.
  3. உலகத்தின் இரண்டு பெரிய வர்த்தக நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக அபயாங்களால், கடந்த செவ்வாய்கிழமை அன்று போரெக்ஸ் சந்தை பாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா சரக்குகள் மீது மேலும் விதிமுறைகள் வைக்கப்பட உள்ளது என கூறியதால், உலக கரென்சி சந்தைகளில் பதட்டம் நிலவியது.
  4. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகள் 653.686 கோடிகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்ற 1324.92 கோடிகளும் கடந்த செவ்வாய் கிழமை அன்று மதிப்பிடப்பட்டுள்ளன.
  5. பிஎஸ்சி சந்தை 130.41 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது. முன்னதாக அமெரிக்க மற்றும் சீனா வர்தகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், 335.40 புள்ளிகளை இழந்தன. நிப்டி50 சந்தை 24 புள்ளிகள் திறப்பு சந்தையில் பெற்றிருந்தன.​


வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top