Profit

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்வு

ஈரோ உள்பட வெளிநாட்டு கரன்சிகள் இந்திய ரூபாய்க்கு ஆதரவாக இருந்ததால் டாலரின் மதிப்பு சற்று பலவீனம் அடைந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்வு

திங்களன்று தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.67-ஆக இருந்தது.

மும்பை : செவ்வாய்க்கிழமையான இன்றைய தொடக்கத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகராக 15 காசுகள் உயர்ந்து ரூ. 72.30-ஆக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் டாலர்களை அதிகளவு சந்தையில் அளித்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதனைத் தவிர்த்து சர்வதேச சந்தையில் ஈரோ உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இந்திய ரூபாயின் உயர்வுக்கு ஆதரவாக இருந்ததாக டீலர்கள் தெரிவித்தனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்றைய தொடக்கத்தின்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.67- அக வீழ்ச்சி அடைந்திருந்தது. திங்களன்று முடிவின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 72.45 ஆக இருந்தது.

சர்வதேச வர்த்தகத்தில் நடைபெற்று வரும் போட்டி காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதற்கிடையே பங்குச்சந்தை தொடக்கத்தின்போது பென்ச்மார்க் சென்செக்ஸ் 95.32 புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் உயர்ந்து 38 ஆயிரத்து 17. 49 புள்ளிகளாக இருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top