Profit

தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு… தெரிந்துகொள்ள வேண்டியவை!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போது இல்லாத அளவுக்கு 70.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு… தெரிந்துகொள்ள வேண்டியவை!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போது இல்லாத அளவுக்கு 70.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய விஷயங்கள்:

இன்று காலை நிலவரப்படி, இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.09 ஆக சரிந்தது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது. 

இந்த விஷயம் குறித்து பொருளாதாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்தர் கார்க், ‘ரூபாயின் வீழ்ச்சிக்கு சில வெளி காரணிகள் தான் காரணம். அது குறித்து கவலையடைய வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

‘டாலரின் தேவையும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றமும் ரூபாய் மதிப்பில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது’ என்று துறை வல்லுநர் ருஷாப் மாரு தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு மட்டும் ரூபாய், 8 சதவிகிதம் வரை அதன் மதிப்பை இழந்துள்ளது. இதனால் இறக்குமதியாகும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல், மின்னணு சாதனப் பொருட்களின் விலை இதனால் கூடுதல் ஆகியுள்ளது. 

டாலருக்கு எதிரான துருக்கியின் பணமான லிராவின் மதிப்பு இந்த ஆண்டு 45 சதவிகிதம் அளவுக்கு வீழ்ந்துள்ளது.

துருக்கியில் நிலவி வரும் ஸ்திரத்தன்மையற்ற நிலையே ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ‘ஒரு வர்த்தகப் போரில் துருக்கி இலக்காக மாறியுள்ளது’ என்று கூறியுள்ளார். 

ரூபாய் மதிப்பு வீழ்ந்தபோதும், ஐடி துறை சார்ந்த பங்குகள் எழுச்சி கண்டுள்ளன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top