Profit

இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

வரலாறு காணாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.91-ஆக இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

செவ்வாயன்று முடிவின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.75-ஆக இருந்தது

ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் வீழ்ச்சி புதன்கிழமையான இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.91- ஆக வீழ்ந்தது. சந்தையின் தொடக்கத்தின்போது ரூ. 72.87- ஆக வீழ்ச்சியடைந்திருந்த ரூபாயின் மதிப்பு, பின்னர் மேலும் சரிந்து ரூ. 72.91 – ஆக உள்ளது. இதேபோன்று கச்சா எண்ணெயின் விலை உயரத் தொடங்கியிருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் நடந்து வரும் வர்த்தகப் போர், இறக்குமதியாளர்கள், எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் வங்கிகளில் டாலருக்கான தேவை அதிரித்திருப்பது உள்ளிட்டவை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களாகும்.

டாலர் – ரூபாய் மதிப்பு தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

1. செவ்வாயன்றும் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 72.70- ஆக இருந்து பின்னர். 72.75- ஆக வீழ்ச்சியடைந்தது.

2. இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. ஆசியாவிலேயே மிகவும் மோசமான கரன்சியாக ரூபாய் மாறி வருகிறது.

3. நடப்பாண்டில் மட்டும் 12 சதவீதம் அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

4. வீழ்ச்சியை சரிசெய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அந்நிய செலவாணியின் மதிப்பு 400 பில்லியன் அளவுக்கு கடந்த மாதம் வீழ்ந்தது. இது 8 மாதத்திற்கான இறக்குமதி தொகைக்கு சமம் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

5. நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொகை செலுத்த நிலுவையும் இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்துள்ளது.

6. கடந்த 2013-ல் மேற்கொள்ளப்பட்டதை போன்று, வெளிநாட்டில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியர்களிடம் இருந்து சுமார் 34 பில்லியனை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.

7. ரூபாய் மதிப்பு வீழ்ந்ததால் இந்திய பத்திரங்களின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளன. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழி வகுக்கும்.

8. ரூபாய் மதிப்பு வீழ்ந்து முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொகை 6.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.

9. 6 முக்கிய கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு 0.15 குறைந்து 95.128 – ஆக உள்ளது.

10. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை, சர்வதேச சந்தையில் நிலைப்புத் தன்மையில்லை என்று ரஷ்யா அறிவித்திருப்பது, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சரக்குகள் குறைந்து வருவது உள்ளிட்டவற்றால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top