Profit

ஆர்டிஜிஎஸ் பணப்பரிமாற்றத்திற்கான நேரம் மாற்றப்பட்டது -ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது

வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளூக்கு காலை 8 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் பரிவர்த்தனை செய்ய முடியும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆர்டிஜிஎஸ் பணப்பரிமாற்றத்திற்கான நேரம் மாற்றப்பட்டது -ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது

தற்போது காலை 8 மணி முதல் பணப் பரிவர்த்தனை தொடங்கும்.


ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் செலுத்தும் முறைக்கான பரிவர்த்தனை நேரத்தை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 26 முதல் ஆர்டிஜிஎஸ்  பரிவர்த்தனைகள் காலை 7மணி முதல் தொடங்கும். “ஆர்டிஜிஎஸ் அமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, ஆர்டிஜிஎஸ் இயங்கும் நேரத்தை நீட்டிக்கவும், வாடிக்கையாளர்களும் வங்கிகளும் காலை 7 மணி முதல் நடவடிக்கை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாற்றப்பட்ட நேர விவரங்கள்

EventTime
Open for Business07:00 hours
Customer transactions (Initial Cut-off)18:00 hours
Inter-bank transactions (Final Cut-off)19:45 hours
Intraday Liquidity (IDL) Reversal19:45 hours - 20:00 hours
End of Day20:00 hours

(Source: RBI)

தற்போது ஆர்டிஜிஎஸ் அமைப்பு வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளூக்கு காலை 8 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் பரிவர்த்தனை செய்ய முடியும் 

இந்த மாத தொடக்கத்தில், டிசம்பர் முதல் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் 24 மணிநேர பணப்பரிமாற்றத்தை அனுமதித்தது. தற்போது ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். NEFT பணப் பரிவர்த்தனையில் ரூ. 2 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்ய முடியும். 

ஜூன் மாத கொள்கை கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கி ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் நெஃப்ட்  மூலமான பணப் பரிமாற்றத்திற்கு கட்டணங்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top