This Article is From May 15, 2020

மீன்வளத்துறை மேம்பாடு - மீனவர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!

கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்திற்காக ரூ. 13,343 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 100 சதவீத கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

மீன்வளத்துறை மேம்பாடு - மீனவர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!

அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் டன் மீன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை மேம்பாடு மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் குறித்து 3-வது நாளாக நிதியமைச்சர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது - 

மீன் வளத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. பிரதமரின் மீன் வளத் திட்டம் என்ற புதிய திட்டம் அமல் படுத்தப்படும். இது நிறைவேற்றப்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் டன் மீன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 

 ரூ. 11 கோடி மீனவர்களின் நலனுக்காகவும், ரூ. 9 ஆயிரம் கோடி மீனவர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கப்படுகிறது. இதனால் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்திற்காக ரூ. 13,343 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 100 சதவீத கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது வரையில் 1.5 கோடி பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.