
ஹைலைட்ஸ்
- ரீசார்ஜ் பேக்குகளுக்கு கூடுதலாக 1.5 ஜி.பி டேட்டா
- 799 ரூபாய்க்கு தினமும் 6.5 ஜி.பி டேட்டா
- ஜூன் 30 வரை மட்டுமே சிறப்பு ரீச்சார்ஜ் பேக் இருக்கும்
ரூ. 799 ப்ரிபெய்ட் ப்ளானில், ஜூன் 30 வரை ரீசார்ஜ் செய்யும் ஜீயோ வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு தினம் 6.5 ஜீபி என்கிற விதத்தில், 182 ஜீபி 4ஜி டேட்டா பெறுவர். இந்த ப்ளான் முதலில் 28 நாட்களுக்கு 140ஜீபி 4ஜி டேட்டா தினசரி 5ஜீபி என்கிற வீதம் தரப்பட்டு வந்தது. இந்த ப்ரிபெய்ட் ப்ளானில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடீ மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் உடன் உள்ளது. அத்தோடு தினசரி 100 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தவும் முடியும்.
புதிய ஜியோ திட்டத்தின் கீழ் (ஜூன் 30 வரை உள்ள) ரூ. 149, ரூ. 349, ரூ. 399 மற்றும் ரூ. 499 ப்ரிபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்கள் அதன் வேலிடிட்டி காலத்திற்கு தினசரி 3 ஜீபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ. 198, ரூ. 398, ரூ. 448 மற்றும் ரூ. 498 ப்ளான்கள் அதன் வேலிடிட்டி காலத்திற்குள்ளாக தினசரி 3.5 ஜீபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 299 ப்ளானில் தினசரி 4.5 ஜீபி டேட்டாவும், ரூ. 599 ப்ளானில் தினசரி 5.5 ஜீபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ரூ. 300 மற்றும் அதற்கு மேல் செய்கின்ற ரீசார்ஜ்கள் அனைத்திற்கும் ரூ. 100 தள்ளூபடியும், ரூ. 300க்கு கீழ் ரீசார்ஜ்கள் அனைத்திற்கும் 20% தள்ளுபடி அளிக்கிறது. இது மை ஜியோ செயலியில் ஃபோன் பே வாலட்டின் மூலம் செய்யப்படும் ரீசார்ஜுகளுக்கு மட்டும் பொருந்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.