Profit

Jio அறிவிப்பினால் Reliance Industrie பங்கின் விலை அதிகரித்து

ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Jio அறிவிப்பினால் Reliance Industrie பங்கின் விலை அதிகரித்து

ஜியோ நெட்வொர்க் நிறுவனம் பிற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிப்பதாக அறிவித்தது.


ஜியோ நெட்வொர்க் நிறுவனம்  பிற நெட்வொர்க் (ஏர்டெல், வோடாபோன் நெட்வொர்க்) அழைப்புகளுக்கு  நிமிடத்திற்கு 6 பைசா வசூலிப்பதாக அறிவித்தது.  இந்த அறிவிப்பிற்கு பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. பங்கின் விலை ரூ.1,366 ஆக அதிகரித்துள்ளது.தேசிய பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.11 சதவீதமாக உயர்ந்தது. 

இனி ஜியோவில் இருந்து ஜியோவுக்கு செய்யப்படும் அழைப்புகள் மட்டுமே இலவசமாக இருக்கும். ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்குகளுக்கு கால் செய்தால், நிமிடம் ஒன்றுக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்ற ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களை பொறுத்தளவில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு IUC எனப்படும் Interconnect Usage Charge கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஜியோ செலுத்தி விட்டு, அழைப்புகளை இலவசமாக்கியது. 

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜியோ நிறுவனம் ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 500 கோடி வரையில் செலுத்தியாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

IUC கட்டணத்தை TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நேரம் 11.06 மணி நிலவரப்படி “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.69 சதவீதம் அதிகரித்து ரூ. 1360.35 ஆக இருந்தது. 



Follow NDTV for latest election results and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top