
387.6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட வோடபோன் ஐடியா முதலிடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொலைதொடர்பு பிரிவான ஜியோ, தனது சக போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனத்தைத் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆபரேட்டராக உருவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ஜியோ, கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்தே, நாட்டின் தொலைத் தொடர்புத் துறையை பாதிப்படைய செய்தது. மலிவான விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி மற்ற நிறுவனங்களை இழுத்து மூட செய்தது.
மே மாத இறுதியில் மட்டும், ஜியோ நெட்வொர்க் புதிதாக 8.2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதேபோல், அந்நிறுவனம் ஏப்ரல் முதல் கடந்த மாத இறுதி வரை 323 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
387.6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட வோடபோன் ஐடியா முதலிடத்தில் உள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகளை பிற்பகுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, அந்நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளில் பெறும் முதலீடுகள் செய்துள்ளது.