10 ஆண்டுகளில் இல்லாத சரிவு… கடும் வீழ்ச்சியில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

Reliance Industries - கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருவதால் சர்வசேச சந்தைகள் மந்தநிலையிலேயே காணப்படுகின்றன. 

10 ஆண்டுகளில் இல்லாத சரிவு… கடும் வீழ்ச்சியில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

Reliance Industries- சவூதி அரேபியா, யாரும் எதிர்பாராத விதமாக, தனது கச்சா எண்ணெய் விலையை திடீரென்று மளமளவென குறைத்தது.

ஹைலைட்ஸ்

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ந்துள்ளது
  • இதனால் அத்துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன
  • கச்சா எண்ணெயும் 30 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

Reliance Industries- சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. 

ஜாம்நகரின் கிருஷ்ணா - கோதாவரி பேசினில் உள்ள உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நடத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், 13.65 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ரிலையன்ஸுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படாத ஒரே நாள் வீழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் பிஎஸ்ஈ சென்செக்ஸில், ரிலையன்ஸின் பங்குகள் 1,096.65 புள்ளிகள் சரிந்தன.

ஓன்ஜிசி நிறுவனத்தின் பங்குகளும் 13 சதவிகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில், கச்சா எண்ணெயின் விலை 30 சதவிகிதம் குறைந்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் எண்ணெய் விலை நிர்ணயப் போரினால்தான் இந்த குழப்பம் நீடித்து வருகிறது. 

சவூதி அரேபியா, யாரும் எதிர்பாராத விதமாக, தனது கச்சா எண்ணெய் விலையை திடீரென்று மளமளவென குறைத்தது. 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சவூதி அரேபியா இவ்வளவு விலைக் குறைப்பில் ஈடுபட்டதில்லை. ரஷ்யாவுடனான பனிப் போரால் இந்த முடிவை சவூதி அரேபியா எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளது. 

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 31.5 சதவிகிதம் அல்லது ஒரு பீப்பாய்க்கு 31.02 டாலர் வரை குறைந்துள்ளது. இது 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவும் மிகக் குறைந்த விலையாகும். 

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருவதால் சர்வசேச சந்தைகள் மந்தநிலையிலேயே காணப்படுகின்றன. 

(With agency inputs)