ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதுவரை இல்லாத அதிக லாபத்தை எட்டியுள்ளது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது ஏப்ரல் - ஜூன் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதுவரை இல்லாத அதிக லாபத்தை எட்டியுள்ளது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது ஏப்ரல் - ஜூன் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. இந்த காலாண்டில் எப்போதும் இல்லாத அளவில் மிக அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது.

இந்த காலாண்டு முடிவில் நிகர லாபம் 9,459 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது 9,108 கோடி ரூபாயாக இருந்தது.

ஜூன் 30-ம் தேதியோடு முடிந்த காலாண்டின் வருமானம் மொத்தம் 1.41 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டின் 90,537 கோடி ரூபாய் வருமானத்தை விட 56.5% அதிகம்.

அந்நிறுவனத்தின், பெட்ரோகெமிக்கல், எண்ணெய் மற்றும் கேஸ் தயாரிப்பு மற்றும் சுத்தீகரிப்பு (சில்லரை வர்த்தகம் மற்றும் ஜியோவை தவிர்த்து) ஆகியவற்றின் லாபத்தை மட்டும் கணக்கு செய்தால் 8,820 கோடி ரூபாய் வருகிறது. இது கடந்த ஆண்டு, 8,196 கோடி ரூபாயாக இருந்தது. 

ஜியோ டெலிகாம் தொடர்ந்து 3-வது காலாண்டாக லாபத்தை பதிவு செய்துள்ளது. ஜியோ 612 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டு 510 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More News