முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் உயர்வு!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெயின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கிடையே, சவூதி அரேபியா - ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் யுத்தத்தை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 1991-க்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையான சரிவை எதிர்கொண்டது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் உயர்வு!!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை நிறுவனம் சந்தித்த நிலையில் இந்த எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஒரே நாளில் 5.86 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை நிறுவனம் சந்தித்த நிலையில் இந்த எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

புதன்கிழமை அமர்வில் எண்ணெய் விலைகள் இரண்டாவது நாளாக உயர்ந்ததால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைப்பார்கள் என எதிர்பாக்கப்பட்டது.

ஏனென்றால் உலகளவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து அமெரிக்கா போராடி வருவதால் உற்பத்தி குறையும் என்றே கருதப்பட்டது. 

 தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5.77 சதவீதம் அதிகரித்து ரூ .1,178.45 ஆக இருந்தது.

காலை 10:18 மணியளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.26 டாலர் அல்லது 3.4 சதவீதம் உயர்ந்து 38.48 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் 0.91 டாலர் அல்லது 2.7 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 35.27 டாலராக இருந்தது.

திங்களன்று பங்குச் சந்தையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டாளர்களின் முதலீடு 12.35 சதவீதமாக சரிந்ததது. 

முந்தைய அமர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு பெரும் விற்பனையை எதிர்கொண்டது, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் 30 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. , பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) சிதைந்த பின்னர் சவூதி அரேபியாவிற்கும், ரஷ்யாவுக்கும் இடையே எண்ணெய் விற்பனையில் போட்டி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெயின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கிடையே, சவூதி அரேபியா - ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் யுத்தத்தை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 1991-க்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையான சரிவை எதிர்கொண்டது.

காலை 11:24 மணி நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.37 சதவீதம் உயர்ந்து, சென்செக்ஸை விட 0.3 சதவீதம் குறைந்துள்ளது.