ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ்… அமேசான், ஃப்ளிப்கார்டுக்கு எதிராக வியூகம்!

ஜியோ நிறுவனத்துக்குத் தற்போது 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ்… அமேசான், ஃப்ளிப்கார்டுக்கு எதிராக வியூகம்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நேரடியான ரீடெய்ல் கடைகள், நாடு முழுவதும் உள்ள 6,500 நகரங்களில் 10,000-த்துக்கும் அதிகமான இடங்களில் உள்ளன.

ஹைலைட்ஸ்

  • முகேஷ் அம்பானி, ரிலையன்ஸின் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்
  • ஜியோவுக்கு 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்
  • ரிலையன்ஸுக்கு நாடு முழுவதும் 10,000 ரீடெய்ல் கடைகள் உள்ளன

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகத்தில் விரைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அந்த நிறுவனம், இணைய வர்த்தகத்தில் களமிறங்கும் பட்சத்தில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஜியோ டெலிகாம் சேவை, நாடு முழுவதும் வைத்திருக்கும் ரீடெய்ல் கடைகள் மற்றும் இதர மொபைல் சேவைகளை இணைத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் ஃப்ளிப்கார்டிற்கு, நேரடியாக ரீடெய்ல் கடைகள் இல்லை என்பதால், ரிலையன்ஸுக்கு இருக்கும் சாதகம் இந்நிறுவனங்களுக்கு இல்லை என சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர். 

தனது திட்டம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “குஜராத்தில் எங்களுக்கு 12 லட்சம் சிறிய ரீட்டெய்லர்கள் உள்ளனர். அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போகும் வகையில் புதிய ஆன்லைன் வர்த்தகத் திட்டத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். இதற்கு ஜியோ சேவை பெரிதும் உதவும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

ஜியோ நிறுவனத்துக்குத் தற்போது 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நேரடியான ரீடெய்ல் கடைகள், நாடு முழுவதும் உள்ள 6,500 நகரங்களில் 10,000-த்துக்கும் அதிகமான இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இணைய வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். 

இணைய வர்த்தக நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்ளூர் வியாபாரிகளின் தொழிலை வளர்க்கும் நோக்கிலும், பல விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. அந்த விதிமுறைகள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை நேரடியாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த விதிமுறைகள், ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் ஆதரவாக அமையும் எனப்படுகிறது. 

More News