This Article is From Jul 15, 2020

ஜியோவில் 33,737 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது கூகிள்!!

முதலீட்டாளர்கள் குழுவின் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்த தகவலை முகேஷ் அம்பானி பகிர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் இது பதினான்காவது முதலீடாகும்.

ஜியோவில் 33,737 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது கூகிள்!!

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவு ஆகும், இதில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உள்ளது.

ரிலையன்ஸின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் தளத்தில், 7.7 சதவீத பங்குகளுக்கு கூகிள் ரூ .33,737 கோடியை முதலீடு செய்யும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் குழுவின் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்த தகவலை முகேஷ் அம்பானி பகிர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் இது பதினான்காவது முதலீடாகும். முன்னதாக கூகிள் பேஸ்புக், குவால்காம் போன்றவைகளும் முதலீடுகளை செய்துள்ளது.

சமீபத்தில் கூகிள் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் செலவழிக்கும் திட்டத்தை அறிவித்தது. “கொரோனா வைரஸ் வெடிப்பு, வணிகத்தை நடத்துவதற்கும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரே மாதிரியாக இணைவதற்கான தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.” என ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

.