Profit

2019-20 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 % ஆக இருக்கும் -பொருளாதார ஆய்வு

இந்த பொருளாதார ஆய்வு தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
2019-20 ஆண்டுகளில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 % ஆக இருக்கும் -பொருளாதார ஆய்வு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிக்கையை வாசித்தார்.

2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வில் தெரிவித்துள்ளார். இந்த கனவு நனவாகிவிட்டால் சீனாவை விட உலகின் மிக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலையை இந்திய பெற முடியும். கடந்த 5 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதமாக உள்ளது. இந்த பொருளாதார ஆய்வு தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்தார்.
Here are 10 things to know:

  1. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் வளர்ச்சி வேகத்தில் சரிவை சந்தித்தது. முந்தைய சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கட்டமைப்பு சீர்சிருத்தங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில், பொருளாதார நிலைமைகள் தொடர்ந்து நிலையானதாக இருப்பதால் 2019-20 ஆம் ஆண்டில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது. 
  2. இருப்பினும் எதிர்மறையான அபாயங்கள் மற்றும் தலைகீழ் வாய்ப்புகள் இவையாவும் 2018-19 இல் தொடர்கின்றன. பொருளாதார ஆய்வு 2019-20 தெரிவிக்கிறது. 
  3. பொருளாதார வளர்ச்சி பாதையை தீர்மானிப்பதில் நுகர்வு செயல் திறன்  முக்கியமானதாக இருக்கும்.
  4.  2018இல்  கிராமப்புற ஊதிய வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கிராப்புற ஊதிய வளர்ச்சி, தேவையை சமாளிக்கும். 
  5. 2011-12 ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வரும் முதலீட்டு வீதம் 2019 -20 ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  6. நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆவணமாக பொருளாதார ஆய்வு  பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான புள்ளி விவர தரவை வழங்குகிறது.
  7. 2018-19 நிதியாண்டில் நிதி ஒருங்கிணைப்புக்கான பாதையில் நிதிப் பற்றாக்குறை 2018-19 இல் 5.8 சதவீதமாக எதிர்பார்க்கிறது. இது 2017-18 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்தது.  
  8. பொருளாதார கணக்கெடுப்பு 2018-19 வெளியீடு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வெளியிடுவதற்கான  முன்னதாக  வருகிறது.
  9. பொதுவாக ஒரு பொருளாதார ஆய்வு மத்திய பட்ஜெட்டுகான கொள்கை முன்னோட்டத்தை வழங்குகிறது. 
  10. ஜனவரி - மார்ச் வரையான காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக சரிந்தது. இது 20  காலாண்டுகளில் மிக வளர்ச்சி விகிதம் குறைந்த காலாண்டாகும். நிதியியல் ஆண்டு முடிவில் 6.8 சதவீதம் குறைவாக இருந்தது. தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் ஆட்டோ மொபைல் விற்பனை போன்ற சந்தையின் மந்தநிலையினை வெளிப்படுத்தின. 





Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top