
மொத்த கடனளவான 8,880 கோடியில் 73 சதவீதமாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் ஏற்பட்ட ஊழலின் காரணமாக 1,500க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த ஆளுமை விதிகளை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
கடன் வாங்குபவர் குறித்த அதிகபட்ச வெளிப்பாடு தன்மைக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறியுள்ளது.
பிஎம்சி வங்கி ஒரு கார்ப்பரேட் கடனாளருக்கு கொடுத்த கடன்களை மறைக்க 21,000க்கும் மேற்பட்ட கற்பனையான கணக்குகளை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ரியால்டி நிறுவனமான ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் கடன்கள் பி.எம்.சி வங்கியில் 6,500 கோடியாக இருந்தது. இது அதன் மொத்த கடனளவான 8,880 கோடியில் 73 சதவீதமாகும்.
ரிசர்வ் வங்கி பெரிய நகர்ப்புற கூட்டுறவு நிறுவனங்களை பெரிய கடன்களுக்கான மத்திய தகவல் களஞ்சியத்தின் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும். இந்த தரவுத்தளத்தில் கடன் தொடர்பான தகவல்களை புகாரளிக்க முடியும்.
தற்போது, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மட்டுமே சி.ஆர்.ஐ.எல்.சிக்கு தகவல்களை புகாரளிக்க வேண்டும் இதனால் வங்கியின் நடவடிக்கை குறித்த சமிக்கைகளை எளிதில் பெற முடியும். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் பொதுவாக சில மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் உள்ள சிறிய உள்ளூர் சமூகங்களுக்கு சேவை செய்கின்றன.