ஆர்.பி.ஐ முக்கிய முடிவு: கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 பேசிஸ் புள்ளிகள் குறைத்துள்ளது.

ஆர்.பி.ஐ முக்கிய முடிவு: கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

ஆர்பிஐ-யின் ஆளுநராக ஷக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பின்னர், அவர் எடுக்கும் முதல் நிதி சார்ந்த முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 பேசிஸ் புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

ரெப்போ ரேட்டின்படி தான், ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்கு குறைந்த கால நிதிகளை ஒதுக்கும். ரெப்போ ரேட், எப்படி உள்ளதோ அதற்கு ஏற்றாற் போலத்தான், வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்யும். தற்போது ரெப்போ ரேட்டில், 0.25 பேசிஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெப்போ ரேட் விகிதம், 6.25 ஆக உள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம், ஆர்பிஐ-யின் ஆளுநராக ஷக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பின்னர், அவர் எடுக்கும் முதல் நிதி சார்ந்த முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsbeep

ரிசர்வ் வங்கியின் கடந்த நிதி சார்ந்த கொள்கை முடிவு எடுக்கும் கூட்டம் டிசம்பர் 5 ஆம் தேதி நடந்தது. அப்போது ஆர்பிஐ ஆளுநராக உர்ஜித் படேல் இருந்தார். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆர்பிஐ, ரெப்போ ரேட்டில் எந்த வித மாற்றங்களையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.