ரெபோ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!

ரெபோ ரேட் என்பது, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கும் குறைந்த கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்

ரெபோ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!

ரெபோ ரேட் என்று சொல்லப்படும் ரெபோ விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இது குறித்து இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சந்தித்து முடிவெடுத்துள்ளனர். இன்று பிற்பகல் 2:30 மணி போல ரெபோ விகிதம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 0.25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 6 சதவிகிதமாக இருந்த ரெபோ விகிதம் இனி 6.25 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த முடிவு 2018- 2019 நிதி ஆண்டுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பண வீக்கம் மற்றும் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணிகள் ரெபோ விகிதம் மாற்றத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

ரெபோ விகிதத்தை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி, `ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசி கமிட்டி தான் இந்த முடிவை எடுத்துள்ளது. கமிட்டியில் இருக்கும் 6 பேரும் ரெப்போ விகிதத்தை அதிகரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் எரிபொருளைத் தவிர மற்ற பொருட்களின் வீக்கம் அதிகமாக இருந்தது. இதுவும் ரெப்போ விகிதத்தை அதிகரிக்க காரணமாக இருந்தது' என்று கூறியுள்ளது.

ரெபோ ரேட் என்பது, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கும் குறைந்த கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.