ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைப்பு! கடன் பெற்றோருக்கு வட்டி குறைய வாய்ப்பு

கடன்வட்டி விகிதம் குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைப்பு! கடன் பெற்றோருக்கு வட்டி குறைய வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி ரெபோ ரேட்டினை 6 சதவீதத்திலிருந்து  5.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் பதவியேற்ற பிறகு 3 வது முறையாக அடுத்தடுத்து ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் 25புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனால் கடன்வட்டி விகிதம் குறையும் என்பதால்  வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். 

அரசின் அதிகாரப்பூர்வ தகவலில் மொத்த உள்நாட்டு உற்பத்திதி முதல் காலாண்டில் 5.8 சதவீதமாக உள்ளது. அதாவது இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை இழந்து விட்டது என்பதாகும். பிப்ரவரி மற்றும் ஏப்ரல் கொள்கை மதிப்பீட்டில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.