This Article is From Nov 20, 2018

வங்கிகளின் கடனளவை அதிகரித்தது ஆர்பிஐ- ரிப்போர்ட்

கடன் செலுத்துவதற்கான காலக்கெடு நாட்களை தளர்த்துவதன் முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது

வங்கிகளின் கடனளவை அதிகரித்தது ஆர்பிஐ- ரிப்போர்ட்

வங்கிகள் 2.5 லட்சம் கோடி வரை கடன் வழங்கலாம் என்று இருந்த அளவை 3 லட்சம் கோடியென அதிகரித்துள்ளது

Mumbai/New Delhi:

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் கொடுக்கும் கடனளவை அதிகப்படுத்தியுள்ளது. வங்கிகள் 2.5லட்சம் கோடி வரை கடன் வழங்கலாம் என்று இருந்த அளவை அடுத்த வருடம் முதல் 3 லட்சம் கோடியென அதிகரித்துள்ளது. கடன் செலுத்துவதற்கான காலக்கெடு நாட்களை தளர்த்துவதன் முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

கடன் செலுத்துவதற்காக நீட்டித்துள்ள காலக்கெடு மார்ச் 31, 2020 வரை இருக்கு என்று இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது.

இந்த தளர்த்தப்பட்ட கொள்கை முடிவுகள் வங்கியின் மூலதனத் தேவைகளை ரூ35,000 கோடியிலிருந்து ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளதென ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.