நிதி கொள்கை நிலையை மாற்றாமல் ஆச்சரியம் கொடுத்த ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தில் 25 பேஸ் புள்ளிகள் அதிகரித்து, வட்டியை 6.5% ஆக உயர்த்தியுள்ளது

நிதி கொள்கை நிலையை மாற்றாமல் ஆச்சரியம் கொடுத்த ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தில் 25 பேஸ் புள்ளிகள் அதிகரித்து, வட்டியை 6.5% ஆக உயர்த்தியுள்ளது. இதனால் இனி வீட்டுக் கடன் வாங்கினால் கொஞ்சம் அதிகம் இ.எம்.ஐ கட்ட வேண்டியது இருக்கும் அக்டோபர் 2013-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு நிதிக் கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“சில்லரை பண வீக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4 சதவிகிதத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகத் தான் வட்டி விகதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.” என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல். தற்போது சில்லரை பண வீக்கம் 4% தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்ல அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை, குறைந்தபட்ச ஆதாரா விலை திட்டத்தின் தாக்கம் பண வீக்கத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாததால் இந்த உயர்வு என்கிறது ரிசர்வ் வங்கி.

ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும், வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டியை 6.25% ஆக வைத்திருக்கிறது. ரெப்போ ரேட் அல்லது வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி ஜுன் மாதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25% ஆக இருந்தது. இப்போது அது 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தை உயர்த்திய போதும் நிதி கொள்கையின் நிலையை நடுநிலையாக வைத்திருக்கிறது ஆர்.பி.ஐ. இது ஆச்சர்யப்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “ தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் அதிகரிப்பதால், நிதி நிலையை ‘கடுமை’ என்ற நிலைக்கு மாற்றும் என்று நாங்கள் நினைத்தோம்” என்கிறார் பொருளாதார வல்லுநர் அனகா தியோதர்.

Newsbeep

2019-ம் ஆண்டு நிதியாண்டின் 2-வது காலாண்டில் பண வீக்கம் 4.6% ஆக இருக்கும் என்றும், 2018-2019 இரண்டாம் பாதியில் 4.8% ஆகவும், 2019-2020 முதல் காலாண்டில் 5% ஆகவும் இருக்கும் என்று கணித்திருந்தது. மேலும், ஜூன் மாதம், சில்லரை பண வீக்கம் 2018-2019 நிதியாண்டின் முதல் பாதியில் 4.8 - 4.9% ஆக இருக்கும் என்றும், இரண்டாம் பாதியில் 4.7% ஆக இருக்கும் என்று கணித்தது.

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% சில்லரை பணவீக்கம், தொடர்ந்து 8 மாதங்களாக உயர்ந்து, இலக்கைத் தாண்டி 5% ஆக உயர்ந்தது, கவலைக்குரிய விஷயமாகவே இருந்தது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.

இருந்த போதும் முன்னர் கணிக்கப்பட்ட ஜி.டி.பி வளர்ச்சியானது இந்த ஆண்டு 7.4% ஆக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி