Profit

ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ஆர்.பி.ஐ, வங்கி கடனுக்கான வட்டி அதிகரிக்கும்

ரெப்போ ரேட் அல்லது வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி ஜுன் மாதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25% ஆக இருந்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS

ரிசர்வ் வங்கி இன்று ரெப்போ வட்டி விகிதத்தில் 25 பேஸ் புள்ளிகள் அதிகரித்து, வட்டி விகிதத்தை 6.5% ஆக உயர்த்தியுள்ளது. அக்டோபர் 2013 -ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு நிதிக் கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டியை அதிகரிக்க ஆறில் 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை, குறைந்தபட்ச ஆதாரா விலை திட்டத்தின் தாக்கம் பண வீக்கத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாத காரணங்களால் இந்த உயர்வு என்கிறது ரிசர்வ் வங்கி. 

ரெப்போ ரேட் அல்லது வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி ஜுன் மாதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25% ஆக இருந்தது. இப்போது அது 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடனுக்கான வட்டி விகிதங்கள் சற்று அதிகரிக்கும். கடனை திருப்பி செலுத்தும் தவணைத் தொகைகளை அதிகமாக கட்ட வேண்டி இருக்கும். “8.5% வட்டி விகதமும், 20 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்தும் காலமும் கொண்ட ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு மாத இ.எம்.ஐ 868 ரூபாய். இப்போது வட்டி உயர்வால் 8.75% என உயர்த்தப்பட்டால், மாதம் 884 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். வட்டி உயர்வினால், கடன் பெறுபவர்கள், அசல் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கவே நினைப்பார்கள்” என்று விளக்குகிறார் பேங்க் பசார் இணையதள நிறுவனத்தின் சி.இ.ஓ அதில் ஷெட்டி.

வட்டி விகதத்தை உயர்த்திய போதும் நிதி கொள்கையின் நிலையை நடுநிலையாக ('நியூட்ரல்') வைத்திருக்கிறது ஆர்.பி.ஐ. இது ஆச்சர்யப்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “ தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் அதிகரிப்பதால், நிதி நிலையை ‘கடுமை’ என்ற நிலைக்கு மாற்றும் என்று நாங்கள் நினைத்தோம்” என்கிறார் பொருளாதார வல்லுநர் அனகா தியோதர். 

2019-ம் ஆண்டு நிதியாண்டின் 2-வது காலாண்டில் பண வீக்கம் 4.6% ஆக இருக்கும் என்றும், 2018-2019 இரண்டாம் பாதியில் 4.8% ஆகவும், 2019-2020 முதல் காலாண்டில் 5% ஆகவும் இருக்கும் என்று கணித்திருந்தது. மேலும், ஜூன் மாதம், சில்லரை பண வீக்கம் 2018-2019 நிதியாண்டின் முதல் பாதியில் 4.8 - 4.9% ஆக இருக்கும் என்றும், இரண்டாம் பாதியில் 4.7% ஆக இருக்கும் என்று கணித்தது. 

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% சில்லரை பணவீக்கம், தொடர்ந்து 8 மாதங்களாக உயர்ந்து, இலக்கைத் தாண்டி 5% ஆக உயர்ந்தது, கவலைக்குரிய விஷயமாகவே இருந்தது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.

இருந்த போதும் முன்னர் கணிக்கப்பட்ட ஜி.டி.பி வளர்ச்சியானது இந்த ஆண்டு 7.4% ஆக இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections. Election results will be out on May 23.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top