வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நற்செய்தி : RBI ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது

RBI Lowers Repo Rate: இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும், இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதம் குறையும்.

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நற்செய்தி : RBI ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது

RBI Lowers Repo Rate: வங்கி தனது ரெப்போ வீதத்தை தொடர்ந்து ஐந்தாவது முறையாக குறைத்தது.

ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் குழு ரெப்போ வட்டி விகித்தை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. 5.15 சதவீதமாக குறைத்துள்ளது. 

ரெப்போ வட்டி வீதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, பெற்ற கடனை திருப்பி செலுத்தும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும், இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதம் குறையும். எனவே சந்தையில் குறைந்த வட்டியால் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

இன்றைய வட்டி விகிதக் குறைப்புடன் வங்கி தனது ரெப்போ வீதத்தை தொடர்ந்து ஐந்தாவது  முறையாக குறைத்தது. ரிசர்வ் வங்கி மொத்தம் ரெப்போ வட்டி விகித்தை 135 அடிப்படை புள்ளிகள் அல்லது 1.35 சதவீதம் குறைத்துள்ளது. 

“இந்த முடிவுகள் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கத்தின் இலக்கை அடையவும்  வளர்ச்சிக்கும் உதவும்” என்று ஆர்பிஐயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி வீதத்தைக் குறைக்க அனைத்து நாணயக் கொள்கை உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர். 

ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில், பெரும்பான்மையான ஆய்வாளர்கள் பணவியல் கொள்கைக் குழு ரெப்போ விகித்தை 5.15 சதவீதமாகக் குறைக்கும் என்று கணித்திருந்தது.