ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும்: ஆர்பிஐ- 10 தகவல்கள்

RBI Policy: கிராமப்புற பொருளாதாரத்துக்கும் உட்கட்டமைப்புத் துறைக்கும் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் வளர்ச்சிக்கு வித்திடும் என்று ஆர்பிஐ தெரிவிக்கிறது. 

RBI Policy: ஆர்பிஐ, நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமாகவே இருப்பதாக கூறியுள்ளது. 

RBI Policy: இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை, பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தது போலவே 5.15 சதவீதத்திலேயே வைத்துள்ளது. ஆர்பிஐ ஆளுநர், சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதி பாலிசி கமிட்டி, “வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் பண வீக்கத்தை கட்டுக்குள்” வைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. நிதி பாலிசி கமிட்டியில் இருக்கும் அனைத்து 6 உறுப்பினர்களும் இன்றைய முடிவுக்குச் சாதகமாகவே வாக்களித்துள்ளனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையில், ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனிப்பட்ட வருமான வரியில் சிறிய சதவிகிதமே குறைக்கப்பட்டது. அதேபோல நிதி மற்றும் கட்டுமானத் துறைகளுக்குப் புதியதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

முக்கிய 10 தகவல்கள்: 

1.ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கும் நிதி ஆண்டிற்கான வளர்ச்சியை 6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது ஆர்பிஐ. தற்போது நடந்து வரும் நிதி ஆண்டிற்கான வளர்ச்சியை 5 சதவிகிதமாக வைத்துள்ளது  ஆர்பிஐ.

2.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் நடத்திய சர்வேயில், ஆர்பிஐ, வரும் அக்டோபர் மாதம் வரை ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

3.ஆர்பிஐ, நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமாகவே இருப்பதாக கூறியுள்ளது. 

4.2020-2021 ஆம் ஆண்டில் சாதாரணமான தென் மேற்குப் பருவமழை பெய்யும் என்று கணக்கிட்டீல் ஆர்பிஐ, நுகர்வு வீக்கத்தை 6.5 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. சில்லரைப் பணவீக்கம், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதம், 7.35 சதவிகிதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

5.2020- 2021 நிதி ஆண்டின் முதல் பாதியில் நுகர்வுப் பணவீக்கம் 5.4 - 5.0 விகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 3வது காலாண்டில் இது 3.2 விகிதமாக குறையும் என்றும் கணித்துள்ளது ஆர்பிஐ. 

6.நடப்பு நிதி ஆண்டின் முடிவில், நாட்டின் பொருளாதாரம் 5 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கும் என்று ஆர்பிஐ சொல்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. அதே நேரத்தில் பொருளாதாரம் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பும் என்றும் சொல்லப்படுகிறது. 

7.சில குறியீடுகள், பொருளாதார ஏற்றத்துக்கு வழிவகுக்கும் என்று ஆர்பிஐ சொல்கிறது. அது நிலைத்து இருக்குமா என்பது போக போகத்தான் தெரியும் என்றும் சொல்கிறது. 

8.கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் உற்பத்தித் துறையல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சேவைத் துறையில் உள்நாட்டுத் தேவை காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ கூறுகிறது. 

9.கிராமப்புற பொருளாதாரத்துக்கும் உட்கட்டமைப்புத் துறைக்கும் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் வளர்ச்சிக்கு வித்திடும் என்று ஆர்பிஐ தெரிவிக்கிறது. 

10.பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள், நீண்ட நாள் வளர்ச்சிக்குத் துணை புரியும் என்றும் உடனடியாக அதன் தாக்கம் பொருளாதாரத்தில் எதிரொலிக்காது என்றும் சில பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். 2008-09 சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கித் தவித்து வருகிறது.