This Article is From May 22, 2020

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் 5 முக்கிய அறிவிப்புகள்!

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் 5 முக்கிய அறிவிப்புகள்!

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடும் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளார திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

ஆர்பிஐ-யின் 5 முக்கிய அறிவிப்புகள்:

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான சலுகை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

90 நாள் கால கடன் வசதிகளை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு மேலும், 90 நாட்கள் நீட்டித்துள்ளது. 

.