This Article is From Jun 24, 2019

பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் ஆர்.பி.ஐ துணை ஆளுநர் ராஜினாமா: 10 ஃபேக்ட்ஸ்!

உர்ஜித் படேல், பதவி விலகலைத் தொடர்ந்து சக்திகாந்த தாஸ், ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட முரணை அடுத்து உர்ஜித் படேல் சென்ற ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகினார். 

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். "தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக" பதவி விலகுவதாக ஆர்.பி.ஐ-க்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ஆச்சார்யா. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இந்த செய்தி வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.தனது பதவியை ராஜினாமா செய்த உடன், நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸுக்கு ஆச்சார்யா, செல்ல இருக்கிறார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு செய்தித் தாள் கூறியுள்ளது. 

2.உர்ஜித் படேல், ஆர்.பி.ஐ-யின் ஆளுநராக பதவி உயர்வு கொடுக்கப்பட்ட பின்னர், வைரல் ஆச்சார்யா, 4 துணை ஆளுநர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.

3.கடந்த டிசம்பர் மாதம், உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, வைரல் ஆச்சர்யாவும் பதவி விலக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ஆர்.பி.ஐ தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

4.மத்திய அரசுடன் ஏற்பட்ட முரணை அடுத்து உர்ஜித் படேல் சென்ற ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகினார். 

5.உர்ஜித் படேல், பதவி விலகலைத் தொடர்ந்து சக்திகாந்த தாஸ், ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

6.ஆர்.பி.ஐ-யின் இன்னொரு துணை ஆளுநரான என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக் காலம் ஜூலை மாதத்தின் முதல் வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது. அவருக்குப் பதவி நீடிப்பு அளிக்கப்படலாம் என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு கூறியுள்ளது. 

7.ஆர்.பி.ஐ-யின் எக்ஸிக்யூடிவ் இயக்குநர் மைக்கெல் பத்ரா, நிதி அமைச்சகத்தில் இருக்கும் சஞ்சீவ் சன்யல் ஆகியோர் ஆச்சார்யாவுக்கு பதிலாக நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

8.சென்ற ஆண்டு மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, சில வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் நடைமுறைகளில் தளர்வு செய்ய வேண்டும் என்று சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதுகாக்கப்பட நிறைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறினார் ஆச்சார்யா. 

9.”ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது பேரிழிவுக்கு இட்டுச் செல்லும்” என்றார் ஆச்சார்யா.

10.உர்ஜித் படேல் விலகலைத் தொடர்ந்து, ஆர்பிஐ விவகாரத்தில் கறார் நடவடிக்கையில் ஈடுபடுவதை மத்திய அரசு தவிர்த்து வந்தது.