பொருளாதாரத்தை ஊக்குவிக்க நபார்டு போன்ற நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு!

Reverse Repo Rate: ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

நபார்டு, என்எச்பி போன்ற நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு!

ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிவர்ஸ் ரெப்போ என்பது வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். வங்கிகள் கடன் கொடுப்பதை ஊக்கப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார். மேலும், நபார்டு, என்எச்பி போன்ற நிதி நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

பணப்புழக்க பாதுகாப்பு விகிதத்தை எளிதாக்குவதற்கான மத்திய வங்கியின் முடிவை ரிசர்வ் வங்கி தலைவர் அறிவித்தார். இது நிதி நிறுவனங்களின் பணப்புழக்க விகிதத்தை தீர்மானிக்கிறது. பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி ஆகியவற்றுக்கு ரூ.50,000 கோடிக்கு சிறப்பு மறுநிதியளிப்பு வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வங்கிகளில் ரொக்கப்பணத்தின் கையிருப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய இந்த நடவடிக்கைகள் போதுமான பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், நிதி அழுத்தத்தை எளிதாக்குவதாகும், வங்கிகள் கடன் வழங்குவதை சீராக்கும். 

கொரோனா வைரஸால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த 14-ம் தேதி சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியி்ட்டிருந்தது. உலகப் பெருமந்தத்துக்குப்பின் உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என தெரிவித்துள்ளது

Newsbeep

மார்ச் 27-ம் தேதிமுதல் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் கடுமையாகப் பாதி்க்கப்பட்டுள்ளன. இருப்பின் சில பகுதிகளில் நமக்கு நம்பி்க்கை ஒளி தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து நடப்பு ஆண்டில் சர்வதேச நிதியம் வெளியிட்ட கணிப்பில் 1.9சதவீதம் வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது ஜி20 நாடுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகபட்சாகும்.

2021-22-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸால் பாதிப்படைந்த இந்த காலகட்டத்திலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதற்கு போதுமான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தி, விற்பனை குறைந்துள்ளது, மின்தேவையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது

கொரோனா வைராஸால் உலகளவில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 34 சதவீதம் குறைந்தது,