Profit

இஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது

ரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான பணவியல் கொள்கைக் குழுவின் முடிவு ஒரு மனதாக இருந்தது.நான்கு உறுப்பினர்கள் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தனர். ஒருவர் மட்டும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது

இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த நிலையில் 5.75 சதவிகிதமாக இருந்த விகிதம் இனி 5.4 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான இந்திய வங்கியின் நாணயக் கொள்கை குழு இன்று நான்காவது முறையாக குறைத்துள்ளது. பொருளாதார மந்த நிலையை சீரமைக்க இது உதவும் என்று கருதப்படுகிறது. இந்த வட்டி விகித குறைப்பு கடன் வாங்கிய பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதக் குறைப்புக்குப் பிறகு வீடு மற்றும் கடன்  வாங்குபவர்களுக்கான மாத தவணைகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும். 

ரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான பணவியல் கொள்கைக் குழுவின் முடிவு ஒரு மனதாக இருந்தது.நான்கு உறுப்பினர்கள் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தனர். ஒருவர் மட்டும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைத்தது. 2019-20 ஆண்டின் முதல் பாதியில் 5.8 சதவீதம் முதல் 6.6 சதவீதமாகவும் இரண்டாம் பாதியில் 7.3 சதவீதம் முதல் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top