வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் விதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கான பொருளாதார நடவடிக்கைகளை அறிவிக்க மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, ரெப்போ விகிதம் மேலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. அதன்படி, 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுவாதக தெரிவித்தார். 

வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், உலக பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும் என்றார். 

தொடர்ந்து, இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsbeep

வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச்.27ம் தேதி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ரெப்போ வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.