கொரோனா அச்சுறுத்தலால் அன்னிய செலாவணி, கடன் பத்திர சந்தை நேரம் மாற்றியமைப்பு!!

வழக்கமாக அன்னிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தைகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கிடையே, RTGS, NEFT போன்ற சேவைகளும், சில்லரை ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளும் தொடர்ந்து எப்போதும் போல இயங்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் அன்னிய செலாவணி,  கடன் பத்திர சந்தை நேரம் மாற்றியமைப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தையின் நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு செவ்வாய் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி காலை 10 மணிக்கு தொடங்கும் சந்தைகள் மதியம் 2 மணியுடன் முடித்துக் கொள்ளப்படும்.

ஏப்ரல் 17-ம்தேதி வரையில் இந்த புதிய நேரம் நடைமுறையில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, சமூக விலகலை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அத்தியாவசியம் இல்லாத பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

மக்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். கொரோனா வைரஸ் வர்த்தக துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அன்னிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Newsbeep

இவ்வாறு ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வழக்கமாக அன்னிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தைகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கிடையே, RTGS, NEFT போன்ற சேவைகளும், சில்லரை ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளும் தொடர்ந்து எப்போதும் போல இயங்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.