வர்த்தக தொடக்கத்தின்போது பங்குகள் 4-11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், பங்குச் சந்தையில் ரயில்வேயின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன.
வர்த்தக தொடக்கத்தின்போது பங்குகள் 4-11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரும் அரசு துறையான ரயில்வேயில் தனியார் முதலீட்டை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 109 வழித் தடங்களில் இயங்கும் 151 ரயில்களில் தனியார் முதலீடு விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு தனியார் முதலீடு ரயில்வேக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரயில்வேயின் பங்குகள் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது.
ரயில்வே பங்குகளான ரைட்ஸ் 14 சதவீதமும், ரயில் விகாஸ் நிகாம் 13 சதவீதமும், இர்கான் இன்டர்நேஷனல் 10 சதவீதமும், ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகள் 7 சதவீதமும் உயர்வை சந்தித்துள்ளன.
ஒட்டுமொத்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது.