This Article is From Aug 30, 2019

''பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் உள்பட 4 வங்கிகள் இணைக்கப்படும்'' - நிர்மலா சீதாராமன்

Merger Of Bank: மத்திய அரசின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். வங்கித்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

Bank Merger India: வாராக் கடனை மத்திய அரசு வசூலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பொருளாதார மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்திருக்கும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியும், யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும். பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட பின்னர், 2017-ல் மொத்தம் இருந்த 27 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறைந்து விடும். 

பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய வங்கிகளின் நிர்வாகக்குழுவில் இருப்பவர்கள் பொது மேலாளர்கள் மற்றும் உயர் பொறுப்புக்கு உயர்த்தப்படுவார்கள். 

வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக மொத்தம் ரூ. 8.65 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தற்போது ரூ. 7.90 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. ரூ. 1.21 லட்சம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.