
ஒன்பது வகையான சிறு சேமிப்பு திட்டங்களை நிதி அமைச்சகம் வழங்குகிறது.
ஹைலைட்ஸ்
- சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.4 சதவீதம் குறைப்பு!
- ஒன்பது வகையான சிறு சேமிப்பு திட்டங்களை நிதி அமைச்சகம் வழங்குகிறது.
- நேற்றைய தினம் முதல் வட்டி குறைப்பு அமலுக்கு வந்தது
குறிப்பிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.8 முதல் 1.4 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பானது, ஏப்.1ம் தேதி நேற்றைய தினம் முதல் அமலுக்கு வந்தது. தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), கிசான் விகாஸ் பத்ரா மற்றும் சுகன்யா சம்ரிதி உள்ளிட்ட ஒன்பது வகையான சிறு சேமிப்பு திட்டங்களை நிதி அமைச்சகம் வழங்குகிறது. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
அதன்படி, 1 முதல் 3 ஆண்டுகளுக்கான கால வைப்புத் தொகைக்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இனி, 5.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஐந்தாண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி காலாண்டு வாரியாக வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு கால வைப்புத் தொகைக்கு வட்டி விகிதம் 8.6 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் காலாண்டு வாரியாக வழங்கப்படுகிறது. சேமிப்பு டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாகத் தொடர்ந்து இருக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்புகளுக்கு திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:
Instrument | Interest Rate In January-March | Interest Rate In April-June | Compounding Frequency |
---|---|---|---|
சேமிப்பு வைப்புத் தொகை | 4% | 4% | Annually |
ஒரு வருட வைப்புத் தொகை | 6.9% | 5.5% | Quarterly |
இரண்டு வருட வைப்புத் தொகை | 6.9% | 5.5% | Quarterly |
மூன்று வருட வைப்புத் தொகை | 6.9% | 5.5% | Quarterly |
5 வருட வைப்புத் தொகை | 7.7% | 6.7% | Quarterly |
5 வருட ஆர்.டி | 7.2% | 5.8% | Quarterly |
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வைப்பு தொகை | 8.6% | 7.4% | Quarterly and paid |
மாதாந்திர வருமான கணக்கு | 7.6% | 6.6% | Monthly and paid |
தேசிய சேமிப்பு வைப்பு | 7.9% | 6.8% | Annually |
பொது வருங்கால வைப்பு நிதி | 7.9% | 7.1% | Annually |
கிசான் விகாஸ் பத்ரா | 7.9% (matures in 113 months) | 6.9% (matures in 124 months) | Annually |
சுகன்யா சம்ரிதி யோஜனா | 8.4% | 7.6% | Annually |
(Source: dea.gov.in) |
Some of these post office saving schemes qualify for income tax benefits.