Profit

மும்பையில் ரூ. 90-ஐ தொட்டது பெட்ரோல் விலை – மற்ற நகரங்களில் 80-ஐ தாண்டி விற்பனை

முன்பு இருந்ததை விடவும் இன்று பெட்ரோல் டீசல் விலை புதிய உயர்வை அடைந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மும்பையில் ரூ. 90-ஐ தொட்டது பெட்ரோல் விலை – மற்ற நகரங்களில் 80-ஐ தாண்டி விற்பனை

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: மும்பையில் லிட்டர் ரூ. 88.26-க்கு விற்பனை

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசலின் விற்பனை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அளித்திருக்கும் தகவலின்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.87-க்கும், கொல்கத்தாவில் ரூ. 83.75-க்கும், மும்பையில் ரூ. 88.26-க்கும் விற்பனையாகிறது, சென்னையில் ரூ. 84.07-க்கும் விற்பனையாகிறது.

திங்களன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 2 ரூபாயை குறைப்பதாக ஆந்திர அரசு அறிவிப்பை வெளியிட்டது.

தேர்தல் நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 சதவீதம் குறைப்பதாக, அதாவது ரூ. 2.5 குறைப்பதாக முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே கடந்த ஞாயிறன்று அறிவித்தார்.

மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 19.48 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 15.33-யை கலால் வரியாக விதித்து வருகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. நாளுக்கு நாள் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலையேற்றம் கண்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11.6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட்டின் கச்சா எண்ணெய் பேரலுக்கும் 67.61 டாலருக்கு விற்பனையாகிறது. பிரென்ட் நிறுவனத்தின் எண்ணெய் 77.48 டாலருக்கு விற்பனையாகிறது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top